நாமக்கல் மாவட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 810 அதிமுவினர் மீது வழக்கு

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உட்பட 810 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-07-30 08:30 GMT

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உட்பட 810 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில், மாவட்டத் தலைநகரங்களில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கடந்த 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில், அதிமுகவினர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நாமக்கல்லில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையிலும், ராசிபுரம் பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. மற்ற இடங்களில் அதிமுக நிர்õவாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கெரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மாவட்ட அளவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, நாமக்கல் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 810 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News