ஆதார் அட்டையுடன் வருபவர்களுக்கே மதுபானம் -கூட்டத்தை குறைக்க போலீசார் அதிரடி !

நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டத்தை குறைக்க ஆதார் கார்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2021-06-18 06:30 GMT

நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டத்தை குறைக்க ஆதார் கார்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யவேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள தாத்தையங்கார்ப்பேட்டை, மேட்டுப்பாளை யம், ஏளூர்ப்பட்டி, சுள்ளிபாளையம், மருதம்பட்டி, காட்டுப் புத்தூர் ஆகிய ஊர்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டவத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் கடந்த 5 நாட்களாக திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு டூ வீலர்கள் மற்றும் கார்களில் கூட்டம் கூட்டமாகச் சென்று மதுபானங்களை வாங்கி குடித்துவிட்டு பலர் மதுவகைகளை வாங்கிக்கொண்டு திரும்பி வருகின்றனர். இதனால் நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகாலை முதலே மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்துவிடுவதால், சமூக இடைவெளி பாதிக்கப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியமல் போலீசார் தினறிவருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வருவதை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்வர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதையொட்டி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, தங்களின் ஆதார் ஆதார் கார்டை காட்டி, மதுக்கடைகளுக்கு முன்பு வரிசையில் நிற்க போலீசார் அனுமதிக்கின்றனர். மற்றவர்களை அங்கு நிற்க விடாமல் விரட்டி அடிக்கின்றனர். இருப்பினும் ஆதார் கார்டுகளுடன் ஏராளமான குடிமகன்கள் நீட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் பலர், உள்ளூர் நண்பர்களின் துணையுடன் மதுபானங்களை வாங்கிச்செல்வதையும் காணமுடிந்தது. அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினார்கள். அளவுக்கு அதிகமாக மதுபானங்களை வாங்கி வந்த 3 பேர் மீது மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News