நாமக்கல் பிலிக்கல்பாளையம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் விலை சரிவு

Jaggery Price Today- நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-07-04 03:15 GMT

Jaggery Price Today- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிர் செய்து வருகின்றனர். இங்கு விளையும் கரும்புகளை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி அவற்றில் இருந்து உருண்டை, அச்சு வெல்லங்கள் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்கின்றனர். அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாகக் கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம், நாட்டு சர்க்கரை ஏலச் சந்தைக்கு கொண்டு விற்பனைக்கு வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஏலச்சந்தை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கல்நதுகொண்டு வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரையை கொள்முதல் செய்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,160 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,180 வரையிலும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் உருண்டை மற்றும் அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,120 வரை ஏலம் போனது. வெல்லம் வரத்து அதிகரித்துள்ளதால் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News