ப.வேலூரில் அதிகாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் நாமக்கல் எம்.பி., குறைகேட்பு

நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், ப.வேலூரில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.;

Update: 2025-05-04 03:50 GMT

ப.வேலூரில் அதிகாலையில் மக்களுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், ப.வேலூரில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளள்ளார். இதையொட்டி நடைப்பயிற்சியில் மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தை எம்.பி. மாதேஸ்வரன் துவக்கியுள்ளார். இன்று அதிகாலை, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுடன் இணைந்து, எம்.பி., மாதேஸ்வரன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் மக்களிடம் உறுதியளித்தார்.

ப.வேலூர் வாக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள், கொமதேக மாநில செயற்குழு உறுப்பினர்கள் துரை, மணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், பரமத்தி ஒன்றிய செயலாளர் தினேஷ் கண்ணன், வேலூர் நகர செயலாளர் சக்திவேல், திமுக பிரமுகர் மகிழ் பிரபாகரன், வேலூர் நகர செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News