நாமக்கல் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை

நாமக்கல் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ரூ 1000ம் ஊக்கத் தொகை வழங்குகின்றனர்.

Update: 2021-07-18 03:00 GMT

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு சேர்ந்த  மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

நாமக்கல், மோகனூர் ரோட்டில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை வரையில் 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 70 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியில், 6, 7, 8-ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில மீடியத்தில் இந்த ஆண்டு சேரும் பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

மாணவர்களிடத்தில் அரசுப் பள்ளிகளின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் இப்பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்தப்பணத்தில் இருந்து கல்வி உதவித்தொகையை வழங்கி வருகின்றனர்.

இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பணிக்கு முதற்கட்டமாக, பள்ளியின் இடைநிலை ஆசிரியை ராஜலட்சுமி ரூ .25 ஆயிரம் நன்கொடை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மற்ற ஆசிரியர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசனிடம் நன்கொடை வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது..

Tags:    

Similar News