கட்டாயக்கல்வி உரிமைச்சடத்தின்படி பள்ளிகளில் சேர 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 13ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-08-06 10:45 GMT

பைல் படம்

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ), சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இண்டர்நெட் மூலம் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் ஆர்டிஇ.டிஎன்ஸ்கூல்ஸ்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டின் மூலம் விண்ணிப்பிக்க ஏற்கனவே ஆக. 3ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தெற்று பரவலை தடுப்பதற்காக ஊரடங் கு அமலில் உள்ளதால் இண்டர்நெட் மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 13ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை பெற விரும்புவோர் இண்டர்நெட் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News