அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பினர் அகவிலைப்படி வழங்காத அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-09-09 12:00 GMT

நாமக்கல் பார்க் ரோட்டில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பினர் அகவிலைப்படி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல் பார்க் ரோட்டில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார்.

டிஎன்ஜிபிஏ மாவட்ட தலைவர் இளங்கோவன், ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

இதில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை வழங்க வேண்டிய மூன்று தவணை 11 சதவிகித அகவிலைப்படியினை வழங்க வேண்டும்.

மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின்கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு செலவினத்தை முழுமையாக இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கவில்லை. மாவட்ட அளவிலான கமிட்டி, மருத்துவ செலவு செய்த ஓய்வூதியர்களுக்கு செலவுப் பணத்தை வழங்க உத்தரவிட்டும் காப்பீட்டு நிறுவனம் திருப்பி விடுகின்றது.

செலவு செய்த முழுப் பணத்தையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் டிஎன்ஜிபிஏ மாவட்ட செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News