நாமக்கல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் 7ம் தேதி துவக்கம்

நாமக்கல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற 7ம் தேதி துவங்குகிறது.

Update: 2022-10-04 09:15 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்ட அளவிலான ஜூனியர் அதலெட்டிக் சேம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற அக்டோபர் 7ம் தேதி தொடங்கி நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் சார்பில், ஆண்களுக்கான முதலாவது ஜூனியர் அதலெட்டிக் சேம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற அக்டோபர் 7 ம் தேதி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலை வகிக்கிறார்.

மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் தலைவரும், நாமக்கல் எம்.பியுமான சின்ராஜ் தலைமை வகிக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் துணைத்தலைவர் நடராஜன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

அக்டோபரற் 7ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவிற்கு அதலெட்டிக் சங்க தலைவரும் எம்.பியுமான சின்ராஜ் தலைமை வகிக்கிறார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏராமலிங்கம், அதலெட்டிக் அசோசியேசன் புரவலர்கள் டாக்டர் செல்வராஜ், பிஎஸ்கே செங்கோடன், துணைத்தலைவர் அசோக்குமார், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனார்.

நாமக்கல் மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் சார்பில், பெண்களுக்கான முதலாவது ஜூனியர் அதலெட்டிக் சேம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற அக்டோபர் 8ம் தேதி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவிற்கு, மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் தலைவரும், நாமக்கல் எம்.பியுமான சின்ராஜ் தலைமை வகிக்கிறார். திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அதலெட்டிக் அசோசியேசன் துணைத்தலைவர்கள் பரந்தாமன், சஷ்டிகுமார், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, விளையாட்டுத்துறை ஆய்வாளர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

மகளிர் அதலெட்டிக் போட்டி நிறைவு விழா 8ம் தேதி மாலை நடைபெறுகிறது. மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் தலைவர் சின்ராஜ் எம்.பி தலைமையில் நடைபெறும் விழாவில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்எல்ஏவுமான தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார். பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர், அதலெட்டிக் சங்க துணைத்தலைவர் மகேஷ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, அதெலெட்டிக் சங்க அமைப்பு செயலாளர் டாக்டர் வெங்கடாசலபதி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் நிர்வாகிகள், சிவகுமார், கார்த்திகேயன், அப்துல் ரஷீத், வணிதா, காந்தி, கார்த்திக், முகிலன், சக்திவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News