நாமக்கல்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய அமைச்சர்

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

Update: 2021-07-06 03:00 GMT

நாமக்கல்லில், வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராமலிங்கம்,பொன்னுசாமி ஆகியோர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில்,  நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி,  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி சின்ராஜ், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 4,553 வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

மேலும், பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில்,  35 பட்டு விவசாயிகளுக்கு ரூ.18.37 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நன்கொடையாளர் ராஜேஸ்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் சங்கர் (அமலாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துணை இயக்குநர் சீனிவாசன், பட்டு வளர்ச்சித்துறை மண்டல துணை இயக்குநர் சந்திரசேகரன், உதவி இயக்குநர் முத்துப்பாண்டியன், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News