பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-11 08:45 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் காரனமாக கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்து. ஊரடங்கால் கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் பயன்பாடும் கனிசமாக குறைந்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கெரோனா காலத்திலும் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். இதனால் லாரி, பஸ், டேக்சி, ஆட்டோ உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் நிறுவனங்களின் இந்தப்போக்கை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி தமிழகத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதை ஏற்று நாமக்கல் மாவ ட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்கக்கோரி மத்திய அரைச வலியுறுத்தி, நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், ஜி. ஆர். சுப்பிரமணியம், நகர காங்கிரஸ் தலைவர் மோகன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன், காங்கிரஸ் பிரமுகர்கள் தாஜ், அருணகிரி, சதீஸ், பொன்முடி, தங்கராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News