கருவில் குழந்தை பாலினம் குறித்து தெரிவித்தால் நடவடிக்கை: கலெக்டர்

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.

Update: 2022-04-07 02:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் ஸ்யோசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் உரிமையாளர்களுக்கான, கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது: கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் பாலினம் குறித்து தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். நம் மாவட்டத்தில் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு சதவிகத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு குறைவாக உள்ளது.

எனவே குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் கருக்கலைப்பு விகிதம் ஆகியவற்றின் விகிதத்தை குறைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம்- 1994ன் படி கருவுற்ற தாய்மார் மற்றும் அவரது உறவினர்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கும் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை நிலைய உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News