நூல்விலை உயர்வை தடுக்க மத்திய நிதியமைச்சரிடம் எம்.பி.,க்கள் கோரிக்கை

நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளித்தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதியமைச்சரிடம் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-05-19 23:45 GMT

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த கடிதத்தை, கனிமொழி எம்.பி தலைமையில் கொங்கு மண்டல எம்.பிக்கள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் வழங்கினார்கள்.

தமிழகத்தில் நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளித்தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கோரி கனிமொழி எம்.பி தலைமையில், கொங்கு மண்டல எம்.பிக்கள் மத்திய நிதியமைச்சரிடம், தமிழக முதல்வர் அளித்த கடிததத்தை அளித்தனர்.

தமிழகத்தில் நூல் விலை கடும் உயர்வால் ஜவுளி உற்பத்தித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட முடியாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

பருத்திவிலை மற்றும் நூல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை திமுக எம்.பி கனிமொழி தலைமையில் கொங்கு மண்டல எம்.பிக்கள், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீ"த்தாராமனை நேரில் சந்தித்து அவரிடம் அளித்தனர். எம்.பிக்கள் நாமக்கல் சின்ராஜ், சேலம் பார்த்திபன், கரூர் ஜோதிமணி, பொள்ளாச்சி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News