அக்கியம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு

நாமக்கல் அருகே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிகாலையில் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-18 01:45 GMT

நாமக்கல் அருகே அக்கியம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், இன்று அதிகாலையில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் அருகே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிகாலையில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பால்வளத்துறை அமைச்சர்நாசர் நாமக்கல் வந்துள்ளார். அவர் இன்று அதிகாலை 6 மணிக்கு, சேந்தமங்கலம் தாலுக்கா அக்கியம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு திடீரென்று வருகை தந்தார். அப்போது அங்கு பால் கொண்டுவந்த, பால் உற்பத்தியாளர்களிடம் சங்க செயல்பாடுகள் குறித்தும், அளவு சரியாக உள்ளதா, பாலுக்கான தொகை முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.

பின்னர் சங்கத்தின் பால் கொள்முதல் பணிகளையும், கணக்குகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து முதலைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்சயபா உறுப்பினர் ராஜேஷ்குமார், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுப்பையன் உள்ளிட்டோர் அமைச்சருடன் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News