மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் அளவீடு முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-29 07:15 GMT

மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் ஊராட்சியம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட, வட்டார வளமையம் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட சிஇஓ மகேஸ்வரி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் புகழேந்தி, மகேஷ்குமார், மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மோகனூர் வட்டார கல்வி அலுவலர் இளங்கோ, வினோத்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி வரவேற்றார். டாக்டர்கள் முகிலாஸ்ரீ, இந்துமதி, லீலாதரன், சவுமியா, மதிவதனி, செவித்திறன் பரிசோதகர் வனிதாலட்சுமி, கண் பரிசோதகர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பிறந்தது முதல் 18வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதனை செய்து அளவீடு செய்தனர். முகாமில் 110 மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News