திருச்செங்கோடு அருகே விசைத்தறி அதிபர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

திருச்செங்கோடு அருகே கொடுக்கல், வாங்கல் தகராறில், விசைத்தறி தொழிலாளியை கொலை செய்தவருக்கு நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-05-09 12:45 GMT

பைல் படம்.

திருச்செங்கோடு அருகில் உள்ள, தேவனாங்குறிச்சியைச் சேர்ந்தவர் குப்புசாமி(49). இவர் விசைத்தறி தொழில் செய்து வந்ததுடன், பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலும் செய்து வந்தார்.

கடந்த 2018 மார்ச் 28ம் தேதி குப்புசாமி தனது டூ வீலரில் வெப்படை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மற்றொரு டூ வீ லரில் வந்த சூரியம்பாளையத்தைச் சேர்ந்த தனபால்(37), ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்(39) ஆகிய இருவரும் குப்புசாமியை வழிமறித்து, கீழே தள்ளி, அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபால், கமலக்கண்ணன் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில், வழக்கில் சம்மந்தப்பட்ட, ஒரு குற்றவாளி கடந்த 2020–ஆம் ஆண்டு இறந்து விட்டதால், மற்றொரு குற்றவாளியான கமலக்கண்ணனுக்கு இரு பிரிவுகளின் கீழ் 2 ஆயுள் தண்டனையும், மேலும் ஒரு பிரிவில், ஒரு மாத சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். கமலக்கண்ணன் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News