கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரிக்கு ஏஐசிடிஇ சார்பில் லீலாவதி விருது

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரிக்கு பெண்கள் தொழில் முனைவோருக்கான லீலாவதி விருது மற்றும் மற்றும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-16 11:00 GMT

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரிக்கு, புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் ஏஐசிடிஇ சார்பில் லீலாவதி விருது வழங்கப்பட்டது.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் உள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும், அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு 2022ம் ஆண்டுக்கான, லீலாவதி விருதுக்கான தேர்வு நடைபெற்றது. அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையே, 8 தலைப்புகளின் கீழ் போட்டி நடைபெற்றது. மொத்தம் 500 அணிகள் கலந்து கொண்டதில், 27 அணிகள் தேர்வு பெற்றன. இதில் தோளூர்ப்பட்டி, தொட்டியம் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணியினர், கொங்குநாடு கல்வி நிறுவன பெண்கள் தொழில் முனைவோர் அமைப்பின் சார்பில், பெண்கள் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர். இதையொட்டி இக்கல்லூரிக்கு 2022ம் ஆண்டிற்கான லீலாவதி விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூ.1,00,000 வழங்கப்பட்டது.

இவ்விருதினை அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் சகஸ்ரபுதே, துணை தலைவர் பூர்ணியா, இந்திய மேலாண்மை இயக்குநர் டாக்டர் வினிட்டா, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆலோசகர் மம்தா அகர்வால், உறுப்பினர் செயலாளர் ராஜிவ் குமார் முன்னிலையில் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் அசோகன், கல்லூரி டீன் யோகப்பிரியா, கல்லூரி பெண்கள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் நித்யா, கல்லூரி ஆராய்ச்சி மேம்பாட்டு துறை பேராசிரியர் ராஜமணிகண்டன் பேராசிரியர் அமுதா ஆகியோரிடம், டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களிடம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆன்-லைனில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

பெண்கள் அதிகாரமளிக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக, விருது பெற்ற அனைவரையும் கொங்குநாடு கல்வி நிறுவன தலைவர் பெரியசாமி, செயலாளர் தங்கவேலு, பொருளாளர் தென்னரசு, துணை தலைவர் அருண்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News