சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல்லில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

Update: 2022-09-13 00:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற சுநத்திர தின விழா பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா கண்காட்சி நடைபெற்று வருகின்றது. நான்காம் நாள் நிகழ்ச்சியாக, மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. பெண்களும் சாதிப்பார்கள், 75 ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் நடந்த இந்தப் பேச்சு போட்டியில் மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

பேச்சு போட்டியில் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தருண் முதல் பரிசையும், புதுச்சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி தீபிகா இரண்டாம் பரிசையும், திருமலை பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி லோகேஸ்வரி மூன்றாம் பரிசையும் பெற்றனர். கொல்லிமலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா மற்றும் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா இருவரும் ஆறுதல் பரிசு பெற்றனர்.

மாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குவிஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவியாளர்கள் தியாகராஜன் (தர்மபுரி), போஸ்வெல் ஆசீர் (மதுரை), வீரமணி (புதுச்சேரி) ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News