கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் முதலாண்டு வகுப்புகள் துவக்க விழா

Cooperative Management -நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் முதலாண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

Update: 2022-09-23 03:45 GMT

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், முதலாண்டு வகுப்புகளை, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Cooperative Management -நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2022-23ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ (டி.கோஆப்) சேர்க்கை நடைபெற்றுள்ளது.

இதையொட்டி முதலாண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செல்வக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகணபதி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News