மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 7.06 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 7.06 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2024-12-23 10:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற, மக்கள் குறைதீர் முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.


நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 7.06 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 511 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களைப் பரிசீலனை செய்த கலெக்டர் அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கூட்டுறவுத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2.42 லட்சம் மதிப்பில் பயிர்கடனுதவி, தொழிலாளர் நலத்துறை சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 8 பேருக்கு ரூ. 4.10 லட்சம் இயற்கை மரண உதவித்தொகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில், சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்லூரி மாணவர் நவீன்குமார் என்பவருக்கு ரூ. 24,000 கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, கண் கண்ணாடி, அதிரும் மடக்கும் குச்சி, பிரெய்லி கடிகாரம், சிறப்பு சக்கர நாற்காலி, 3 சக்கர நாற்காலி என ரூ.30,206- மதிப்பில் உதவி உபகரணங்கள், என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.7.06 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, ராசிபுரம், வீ.நகர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி அசோக்குமார் காதொலி கருவி வேண்டி அளித்த மனுவின் அடிப்படையில் உடனடியாக ரூ. 2,780 மதிப்பில் காதொலி கருவியை வழங்கினார்.

இக்கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், நாமக்கல் ஆர்டிஓ பார்தீபன், தொழிலாளர் உதவி கமிஷனர் இந்தியா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Similar News