நாமக்கல் நகராட்சியில் கட்சிகளின் ஆதரவுடன் 2 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு

நாமக்கல் நகராட்சியில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் 2 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-02-07 07:30 GMT

ஸ்ரீதேவி, தனசேகரன்.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதையொட்டி வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில், வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று. இன்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாமக்கல் நகராட்சியில் சந்தைப்பேட்டைப்பதூர் பகுதிக்குட்பட்ட 25 வது வார்டில் போட்டியிட ஸ்ரீதேவி (46) என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சந்தைப்பேட்டைப்புதூர் பகுதியைச் சேர்ந்த, இவர் மறைந்த டியூசன் மணி என்பவரின் மனைவி ஆவார். 25வது வார்டுக்கு ஸ்ரீதேவி மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். வேறு யாரும் இந்த வார்டுக்கு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இன்று மாலை ஸ்ரீதேவி 25வது வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்.

நாமக்கல் நகராட்சி 21வது வார்டு காவேட்டிபட்டிக்கு உட்பட்டதாகும். இந்தவார்டில் போட்டியிட தனசேகரன் (52), சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட மனு தாக்கல் செய்தவர்கள், தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனால் அவர் 21வது வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்றதாக இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.

25வது சந்தைப்பேட்டைப்புதூர் மற்றும் 22வது வார்டு காவேட்டிப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வார்டில் பொது வேட்பாளரை நிறுத்துகிறோம், அவர் வெற்றிபெற்ற எங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்களை செய்வார். எனவே அரசியல் கட்சியினர் யாரும், தங்கள் வார்டில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

இதையொட்டி திமுக,அதிமுக உள்ளிட்ட எந்தக்கட்சியும் இந்த 2 வார்டுகளில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. எனவே 2 சுயேச்சை வேட்பாளர்களும் அரசியல் கட்சி ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் 37 வார்டுகளுக்கு மட்டும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

Tags:    

Similar News