நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக தலைமை அறிவித்த 26 பேரும் போட்டியின்றி தேர்வு

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக தலைமை அறிவித்த 26 நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-03-05 10:30 GMT

பைல் படம்.

மாவட்டத்தில் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, 2 நகராட்சி மற்று 11 டவுன் பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் பதவி உள்ளிட்ட 22 பதவிகளிலும், திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவில் நாமக்கல், இராசிபுரம் ஆகிய 2 நகராட்சிகளும், 11 டவுன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இவற்றிற்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்று, கடந்த 2ம் தேதி கவுன்சிலர்களாக பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து, 4ம் தேதி உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பாளர்கள் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் பரிந்துரையின் பேரில், கட்சித்தலைமை மூலம் அறிவிக்கப்பட்டனர்.

2 நகராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்ட 4 பேர், 11 நகராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 22 பேர் என மொத்தம் 26 திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 4ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத்தேர்தலில் 26 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்று பொறுப்பேற்றனர். கிழக்கு மாவட்ட திமுகவில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றிபெற்றதால், அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் யாரும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திமுக தலைமை அறிவித்த 26 வேட்பாளர்களும் ஏகமனதாக தேர்வு பெற்றனர்.

அதன்விபரம்:

நகராட்சிகள்: நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், துணைத்தலைவர் கோமதி.

டவுன் பஞ்சாயத்துக்கள்: அத்தனூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் சின்னுசாமி, துணைத்தலைவர் கண்ணன், எருமப்பட்டி தலைவர் பழனியாண்டி, துணைத்தலைவர் ரவி, காளப்பநாயக்கன்பட்டி தலைவர் பாப்பு, துணைத் தலைவர் கவிதா. மோகனூர் தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், நாமகிரிப்பேட்டை தலைவர் சேரன், துணைத்தலைவர் அன்பழகன், ஆர்.பட்டணம் தலைவர் போதம்மை, துணைத்தலைவர் நல்லதம்பி. பிள்ளாநல்லூர் தலைவர் சுப்ரமணியம், துணைத்தலைவர் காவேரியம்மாள். ஆர்.புதுப்பட்டி தலைவர் சுமதி, துணைத் தலைவர் ஜெயக்குமார். சீராப்பள்ளி தலைவர் லோகாம்பாள், துணைத் தலைவர் செல்வராஜூ, சேந்தமங்கலம் தலைவர் சித்ரா, துணைத்தலைவர் ரகு, வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ், துணைத்தலைவர் மாதேஸ்வரன். இவர்கள் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள். உள்ளாட்சித் தலைவர்களாக வெற்றிபெற்றவர்கள் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News