மோகனூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குதிரை எல்கைப் பந்தயம்

மேகனூரில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குதிரை எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-01-19 03:00 GMT

மோகனூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குதிரை எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மோகனூர் இளைஞரணி சார்பில், மோகனூரில் குதிரை எல்கைப் பந்தயம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மோகனூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நவலடி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி வரவேற்றார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் போட்டியை துவக்கி வைத்தார்.

பெரிய மற்றும் புதிய குதிரைகள் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது,. அதில், புதிய குதிரை போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 46 குதிரைகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரித்து நடை பெற்ற போட்டியில் பிரிவு 1 ல் திருச்சி நம்பி உதயசூரியன், முதல்பரிசும், பவானி கற்பக விநாயகர் இரண்டாம் பரிசும்,வேகாம்பட்டி விஜயகுமார் 3வது பரிசும் பெற்றது.

பிரிவு 2ல், பண்ணாரியம்மன் குதிரை முதல் பரிசும், கரூர் சாத்துவிகா குரூப் இரண்டாம் பரிசும், கோவை வஞ்சியம்மன் மூன்றாம் பரிசும் பெற்றன. இதில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு முதற்பரிசு 20,000, இரண்டாம் பரிசு 15,000 மூன்றாம் பரிசு 10,000 மற்றும் கோப்பைகளை வழங்கப்பட்டன

பெரிய குதிரை போட்டியில், மொத்தம், 32 குதிரைகள் கலந்து கொண்டன. அதில், திருச்சி நம்பி உதயசூரியன் முதலிடம், பேராவூரணி அப்பாஸ் இரண்டாமிடம், ஆத்தூர் புரூட்ஸ் மூன்றாமிடம், குளித்தலை ஐயனார் நான்காமிடம், காரைக்கால் ஜூலி ஐந்தாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற குதிரைகளுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ.8 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியில், மாவட்ட அவைத்தலைவர் உடையவர், இலக்கிய அணி புரவலர் அர்ச்சுனன், முன்னாள் நகர செயலாளர் செல்லவேல், மாவட்ட மீனவரணி சுகுமார், விவசாய அணி வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News