நாமக்கல் மாவட்டத்தில் கனமழை: மின்னல் தாக்கி கூரை வீடு தீக்கிரை

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. கருங்கல்பாளையத்தில் இடி தாக்கி, கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

Update: 2021-07-02 04:00 GMT

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கடும் வெப்ப நிலவியது. எனினும், வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

புதுச்சத்திரம் அருகே உள்ள கருங்கல்பாளையம் பகுதியில்,  இடி மின்னல் அதிகமாக இருந்தது. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின்னல் தாக்கி,  வீடு தீப்பற்றி எரிந்து சேதமானது. தகவல் கிடைத்ததும் நாமக்கல் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அனைத்தனர்.

நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, வலையப்பட்டி, மோகனூர், பாலப்பட்டி, பரமத்தி வேலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்ததால் வெப்ப தனித்து குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவுப்பணியை துவக்கி யுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்: எருமப்பட்டி 20 மி.மீ, குமாரபாளையம் 8மி.மீ, மங்களபுரம் 31 மி.மீ, நாமக்கல் 18 மி.மீ, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 15 மி.மீ, பரமத்திவேலூர் 38 மி.மீ, புதுச்சத்திரம் 47 மி.மீ, ராசிபுரம் 52.1 மி.மீ, சேந்தமங்கலம் 31 மி.மீ, திருச்செங்கோடு 6 மி.மீ, கொல்லிமலை 43 மி.மீ. மாவட்டத்தில் மொத்தம் 338.9 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News