பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-07-24 09:30 GMT

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது. தலைமை நிலைய செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருள்செல்வன், மாநில மகளிரணி செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் சரண்டர் ஆகியவற்றை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசை பின்பற்றி அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ஊக்க ஊதிய முறையை ரத்து செய்வதுடன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உயர்கல்வி ஊக்க ஊதியத்தை உயர்கல்வி முடித்தவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர், மாணவர் விகிதத்தை, 1:25 என்ற விகிதத்தில் மாற்றி கற்றல், கற்பித்தல் பணி சிறப்பாக நடக்க உதவ வேண்டும். கொல்லிமலை போன்ற மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணி நிரவல் மூலம் நிர்வாக மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News