தமிழகத்தில் முதலிடம்; இந்தியாவில் 2ம் இடம்: நாமக்கல் செய்த சாதனை தெரியுமா?

தபால் துறை தங்கப்பத்திரம் முதலீட்டில், நாமக்கல் கோட்டம் மாநில அளவில், மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

Update: 2022-01-15 12:30 GMT

தபால்துறை தங்கப்பத்திரம் முதலீட்டில், நாமக்கல் கோட்டம் மீண்டும் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. இது குறித்து நாமக்கல் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் ஆசீப் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய அரசின் தபால்துறை தங்க பத்திரத் திட்ட முதலீடு, கடந்த 10ம் தேதி முதல், 13 ம் தேதி வரை, 4 நாட்கள் நடைபெற்றது. ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.4,786 என நிர்ணம் செய்து விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் கோட்டத்தில் 5,013 கிராம் மதிப்பில் தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம், நாமக்கல் தபால் கோட்டம், தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் இரண்டாமிடமும் பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளது.

கடந்த 4 நாட்கள் நடைபெற்ற தங்கப்பத்திர விற்பனையில், ரூ.2 கோடியே, 39 லட்சத்து, 92 ஆயிரத்து 218 மதிப்பில் மொத்த முதலீடு பெறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவற விட்டவர்கள், வரும் பிப். 28 முதல் மார்ச் 4 வரை நடைபெற உள்ள அடுத்த தங்க பத்திர விற்பனையில் முதலீடு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News