நாமக்கல்: பிப்.1 முதல் நாட்டுக்கோழிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், பிப்ரவரி 1 முதல் நாட்டுக்கோழிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Update: 2022-01-26 00:15 GMT

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. ஊரகப்பகுதிகளில் உபயோகமற்ற தானியங்களை உட்கொண்டு,  நாட்டுக்கோழிகள் வளர்ந்து வருகின்றன. கோழிகளை,  கோழிக்கழிச்சல் நோய் எளிதாக பாதிக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த,  வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக கோழிக்கழிச்சில் தடுப்பூசி போடப்படுகிறது.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும்,  பிப்ரவரி மாதத்தில்,  கோழி நோய் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற பிப்.1 முதல் 14ம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்போர்,  தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் நடைபெறும் முகாமில், தங்களது கோழிகளுக்கு இலவசமாக கோழிநோய் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News