விவசாயிகள் கூட்டமைப்பின் எண்ணெய் உற்பத்தி ஆலை : கலெக்டர் ஆய்வு

புதுச்சத்திரத்தில் விவசாயிகள் கூட்டமைப்பின் எண்ணெய் உற்பத்தி ஆலையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-09-17 10:15 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் எண்ணெய் உற்பத்தி ஆலையை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் நைனாமலை உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மூலம் எண்ணெய் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் ஆலையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எண்ணெய் ஆலையில் கடலை பருப்புகளை, கடலையிலிருந்து பிரித்தெடுக்கும் இயந்திரம்,எண்ணெய் அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கணக்குப்புத்தகங்களை பார்வையிட்டார்.

கூட்டமைப்பிற்கு நபார்டு மூலம் வழங்கப்பட்டுள்ள மானியத்தையும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கடலை தோல் நீக்கும் இயந்திரம், எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரம், மாவு அரவை இயந்திரம், புண்ணாக்கு அரவை இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்குவதற்காகவும், மூலப்பொருட்கள் கொள்முதலுக்காகவும் ரூ.10 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளதையும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நவணி தோட்டக்கூர்ப்பட்டியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.1.50 லட்சம் மானியத்தை கொண்டு மகளிர் முன்னேற்ற சங்கத்தினர் கல்யாண ஸ்டோர் அமைத்து நடத்தி வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர், புதுச்சத்திரம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு, மாதந்தோறும் குழந்தை பிறப்பு விவரங்களையும், கர்ப்பிணித் தாய்மார்களின் விவரங்களையும் பார்வையிட்டார்.மகப்பேறு சிகிச்சை பிரிவு தனியார் ஆஸ்பத்திரிகளைவிடவிட சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதை பார்த்து கலெக்டர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆய்வின் போது வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், நபார்டு உதவி பொது மேலாளர் ரமேஷ், ஊரக புத்தாக்கத்திட்ட அலுவலர் இமானுவேல் மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News