நாமக்கல்லில் முன்னாள் எம்எல்ஏ கே.கே.வீரப்பன் காலமானார்

Dead News Today -நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.கே.வீரப்பன் காலமாணார்.

Update: 2022-06-15 05:30 GMT

கே.கே.வீரப்பன், முன்னாள் எம்எல்ஏ.,

Dead News Today - நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.கே.வீரப்பன் காலமானார்.

நாமக்கல் எஸ்.பி. புதூரைச் சேர்ந்தவர் கே.கே.வீரப்பன் (77). நாமக்கல்லில் வக்கீலாக பணியாற்றி வந்த இவர் 1980ம் ஆண்டில் திமுக ராஜ்சயபா எம்.பியாக பணியாற்றினார். கடந்த 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றினார். 1996 முதல் 2001ம் ஆண்டு வரை கபிலர்மலை சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏவாக செயல்பட்டு வந்தார். அதே நேரத்தில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராகவும் பணியாற்றி வந்தார். பின்னர் திமுகவை விட்டு வெளியேறிய அவர் காங்கிரசில் இணைந்து, 2008 முதல் 2011 வரை நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவராக செயல்பட்டார். பின்னர் அரசியலில் இருந்து விலகினார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் இன்றி இருந்து வந்த கே.கே.வீரப்பன் இன்று 15ம் தேதி காலை நாமக்கல் எஸ்.பி. புதூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு சிவகாமி என்ற மனைவியும், டாக்டர் சந்திரசேகர், ராஜேந்திரகுமார் ஆகிய மகன்களும் உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News