காவிரி-திருமணி முத்தாறு இணைப்பை வலியுறுத்தி கொமதேக சார்பில் 1008 பால்குடம் ஊர்வலம்: எம்எல்ஏ, எம்.பி., பங்கேற்பு
தைப்பூசத்தை முன்னிட்டும், காவிரி-திருமணி முத்தாறு இணைப்பை வலியுறுத்தியும், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற 1,008 பால் குட ஊர்வலத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ, மாதேஸ்வரன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.;
சேந்தமங்கலத்தில், கொமதேக சார்பில் நடைபெற்ற 1,008 பால் குட ஊர்வலத்தில், ஈஸ்வரன் எம்எல்ஏ காவடியுடன் கலந்துகொண்டார். அருகில் மாதேஸ்வரன், எம்.பி.,
தைப்பூசத்தை முன்னிட்டும், காவிரி-திருமணி முத்தாறு இணைப்பை வலியுறுத்தியும், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற 1,008 பால் குட ஊர்வலத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ, மாதேஸ்வரன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சார்பில் 1,008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. கொங்கு மண்டலத்தில் விவசாயம் சிறந்திட காவிரி-திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோவில் அருகில் இருந்து பால் குட ஊர்வலம் துவங்கியது. கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரளான பக்தர்கள், 1,008 பால் குடம் மற்றும் காவடிகளை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக தத்தகிரி முருகன் கோயிலுக்குவந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிசேகம் உள்ளிட்ட சிறப்பு அபிசேகங்கள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கொமதேக பொதுத்துறை செயலாளர் சக்தி நடராஜன், மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, துரை, மணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், செந்தில் ராஜா, செல்வராஜ், தமிழரசு, சீனிவாசன், ஜெகதீஸ், மகளிர் அணி சத்யா, ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.