நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பு மனு தாக்கல் நிறைவு : மொத்தம் எவ்ளோ மனுக்கள்..?

நாமக்கல் மாவட்டத்தில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் எவ்வளவு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பதைப் பார்ப்போம் வாங்க.

Update: 2024-03-27 12:15 GMT

கோப்பு படம் 

நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு  பெற்றது. மொத்தம் எவ்ளோ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது செய்திக்குள் தரப்பட்டுளளது. 

நாமக்கல்:

லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. நாமக்கல் தொகுதியில் மொத்தம் 58 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இன்று 27ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. கடந்த, 20ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்கிய அன்று, அகிம்சா சோசியாலிஸ்ட் கட்சி நிறுவன தலைவர் காந்தியவாதி ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, 22ம் தேதி, சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். 25ம் தேதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், பாஜக வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி மற்றும் மற்றும் சுயேச்சைகள் என ஒரே நாளில் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், 26ம் தேதி 8 பேர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று 27ம் தேதி கடைசி நாளில் மொத்தம் 31 பேர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஒரு சில வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசிநாள் வரை மொத்தம் 58 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 30ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். அன்று மாலை, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அப்போதுதான் நாமக்கல் லோக்சபா தொகுதியில் இறுதியாக போட்டியில் உள்ள வேட்பாளர்கள் குறித்த விபரம் முழுமையாக தெரியவரும். வருகிற ஏப். 19ம் தேதி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறும். பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெறும்.

Tags:    

Similar News