பஸ் ஸ்டாண்ட் இடமாற்றும் முடிவை கைவிட நாமக்கல் நகர வளர்ச்சிக்குழு தீர்மானம்

நாமக்கல் பஸ்ஸ்ஸ்டாண்ட் மாற்றத்தை கைவிட வேண்டும் என நகர வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-27 09:00 GMT

நாமக்கல் நகர வளர்ச்சிக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் சேக்நவீத் பேசினார்.

நாமக்கல் நகர வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் அதன் தலைவர் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சேக்நவீத் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் முன்னிலை வகித்தார். நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க தலைவர் மாணிக்கம் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி, நாமக்கல் பஸ்ஸ்டாண்ட் முதலைப்பட்டிக்கு இடமாறும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாமக்கல் நகரத்தில் தற்போது செயல்படும் பஸ்ஸ்டாண்ட் அதிக ஆக்கிரமிப்பும், சுகாதார சீர்கேடும் உள்ளபடியால், பயணிகள் குடிக்க குடிநீர் வசதியின்றியும், பஸ் நிலையத்திற்க்கு வரும் பொதுமக்கள், பெரியோர்கள், பெண்கள், ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகின்றனர். எனவே தற்போதுள்ள பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுகாதார சீர்கேடுகளை சீர்படுத்தி நிர்வகிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் நகர மையத்தில் தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட் முதலைப்பட்டிக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நாமக்கல் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் சங்கர், வீரக்குமார், சீனிவாசன், பத்மநாபன், காராளன், விசிக மாவட்ட செயலாளர் மணிமாறன், மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் ஆதம் பாரூக், சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, தமிழ் புலி கட்சி நகர செயலாளர் மகேஷ்வரன், செயலாளர் கருணாகரன், பொருளாளர் முரளி, காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் விஸ்வநாதன், வீனஸ் ஜெகநாதன், தில்லை சிவக்குமார், அன்பு, ராமச்சந்திரன், வக்கீல்முருகன், வாசு சீனிவாசன், தேவராஜ், குப்புசாமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News