மோகனூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் பூ தாண்டும் விழா

மோகனூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் பூ தாண்டும் விழா நடைபெற்றது.

Update: 2022-01-17 10:15 GMT

மோகனூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் பூ தாண்டும் விழா நடைபெற்றது.

மோகனூர் தாலுக்கா, ஊனாங்கல்ப்பட்டி கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 5 கிராமத்தினர் ஒன்றிணைந்து, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காணும் பொங்கல் அன்று மாடுகள் பூ தாண்டும் விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு, ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் அன்று, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், திங்கள்கிழமை, வீரகாரன் கோயில் மைதானத்தில், மாடு பூ தாண்டும் விழா நடைபெற்றது.

குன்னத்தூர், சின்ன பெத்தாம்பட்டி, மல்லமூச்சம்பட்டி, மேலப்பட்டி, ஊனாங்கல்ப்பட்டி ஆகிய 5 கிராம மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 5 கிராமங்களில் இருந்து, 5 கோயில் மாடுகள் கொண்டு வரப்பட்டு, கோயில் அருகில் நிறுத்தி பூஜை நடைபெற்றது. பின்னர், ஊர் தலைவர் முத்து நாயக்கர் கொடியசைக்க 5 கோயில் மாடுகளையும், பிடித்தபடி இளைஞர்கள் கோயிலைச் சுற்றி ஓடி வந்தனர். இதில் முதலிடம் பிடித்த சின்ன பெத்தாம்பட்டி கிராம கோயில் மாட்டுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News