நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

Update: 2022-06-14 12:15 GMT

பைல் படம்.

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (என்சிஎம்எஸ்) வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியைக் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். திருச்செங்கோடு, கொங்கனாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்கின்றனர். இன்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு 3,350 மூட்டை பருத்தி வந்தது. மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் விற்பனை நடைபெற்றது. எலத்தில், ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9,002 முதல் 11,260 வரையிலும், டிசிஎச் ரக பருத்தி ரூ.10,099 முதல் முதல் 11,799 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ. 9,869 மதல் ரூ. 10,419 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.3,998 முதல் ரூ. 8,100 வரையிலும் விற்பனையானது.

Tags:    

Similar News