நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

Update: 2021-10-27 06:45 GMT

கோப்பு படம்

நாமக்கல், -திருச்செங்கோடு ரோட்டில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டி (என்சிம்எஸ்) உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், பரமத்தி, கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்,  பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவார்கள்.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில்,  450 மூட்டைகள் பருத்தி வரத்து வந்தது. திருச்செங்கோடு, கொங்கணாபுரம், சேலம், பெருந்துறை, அவினாசி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்,  நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில் ஆர்சிஎச் பருத்தி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,011 முதல் ரூ. 8,818 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7,899 முதல் ரூ. 9,009 வரையிலும், கொட்டுப்பருத்தி ரகம் ரூ. 4,100 முதல் ரூ. 4,799 வரையிலும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ. 11 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம் மூலம் விற்பனையானது.

Tags:    

Similar News