மோகனூர் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு

மோகனூர் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-05-16 01:45 GMT

மோகனூர் ஊராட்சி ஒன்றியம் கே. புதுப்பாளையம் பஞ்சாயத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நர்சரியை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும், வளர்ச்சித் திட்டப்பணிகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கே.புதுப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து பதிவேடுகளை கலெக்டர் சரிபார்த்தார். தொடர்ந்து, வள்ளியப்பம்பட்டிபுதூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ. 6.94 லட்சம் மதிப்பில், கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை பார்வையிட்ட கலெக்டர், கட்டிடத்தின் தரம் மற்றும் அளவுகளை பரிசோதித்து பார்த்தார்.

குட்டலாம்பாறை கிராமத்தில், தேசிய ஊரக வேலைஉறுதியளிப்பு திட்டத்தின் கீழ்,ரூ. 8.22 லட்சம் மதிப்பில், 25 ஆயிரம் மரக்கன்று நாற்றுகள் வளர்க்கும் நர்சரியை பார்வையிட்டார். மேலும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தில், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப மண்புழு உரம் வழங்க அறிவுறுத்தினார்.

குட்டலாம்பாறையில் பயன்பாடின்றி உள்ள போர்வெல் கிணறு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், பி.டி.ஓ தேன்மொழி, பஞ்சாயத்து தலைவர் சின்னம்மாள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News