நாமக்கல்லில் விபத்தில் தொழிலாளி பலி : புதிய கிரிமினல் சட்டத்தில் டிரைவர் கைது..!

மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டத்தின்கீழ் நாமக்கல் நகரில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 02:00 GMT

கோப்பு படம் 

நாமக்கல்லில் விபத்தில் தொழிலாளி பலியான வழக்கில் புதிய கிரிமினல் சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் :

மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டத்தின்கீழ் நாமக்கல் நகரில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, ரங்கர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36), கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம்  மாலை, நாமக்கல் சேலம் மெயின் ரோட்டில், பொன்நகர் பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வடபாவ் கடை பெண் முகத்தை பச்சைக் குத்திய நபர்..!

இந்த விபத்த்தில் சம்மந்தப்பட்ட, என்.கொசவம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தசாமி (58) என்பவரை, நாமக்கல் போலீசார் கைது செய்து, அவர் மீது, புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து நாமக்கல் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் கூறுகையில், ’புதிய குற்றவியல் சட்டத்தின்படி, விபத்து மரண வழக்குகள் 106 (1) என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டத்தின்படி, தவறு செய்தவருக்கு கோர்ட்டில் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது’ என்றார்.

Tags:    

Similar News