வடபாவ் பெண் முகத்தை பச்சைக் குத்திய நபர்..!

வடபாவ் பெண் முகத்தை பச்சைக் குத்திய நபர்..!
X
வடபாவுக் கடை நடத்தும் பெண்ணின் முகத்தைப் பச்சைக் குத்திக் கொண்ட நபர். நீங்கள் சரியாகத்தான் புரிந்துகொள்கிறீர். ஆம் அவர் வடபாவு கடை நடத்தும் பெண்மணிதான்.

வடபாவுக் கடை நடத்தும் பெண்ணின் முகத்தைப் பச்சைக் குத்திக் கொண்ட நபர். நீங்கள் சரியாகத்தான் புரிந்துகொள்கிறீர். ஆம் அவர் வடபாவு கடை நடத்தும் பெண்மணிதான். அவரின் முகத்தை ஏன் இந்த நபர் பச்சைக் குத்திக் கொண்டார்? அப்படி அவருக்கு என்ன சிறப்பு என்பது உள்ளிட்ட தகவல்களை விரிவாக காண்போம்.

சின்ன சின்ன தகவல்கள் கூட சுவாரஸ்யமாக இருந்தால் அவை இணைய உலகில் பெரியதாக பேசப்படும் நிலைக்கு ஆளாகும். சுவாரஸ்யமான தகவல்கள் சில சமயம் கேலி செய்யவும் பயன்படுத்தப்படும். அப்படி கேலி ஆக பேசப்பட்டு, பின் அவர் ஏன் இப்படி செய்தார் என்பது தெரிந்து அவரைப் பாராட்டியவர்களும் இருக்கிறார்கள்.

இணையம் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஏராளமான வீடியோக்கள் வருகின்றன. அவற்றில் சுவாரஸ்யமானவை வைரலாகின்றன. அப்படி டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வுதான் தற்போது வைரலாகி வருகின்றது. இது வேண்டுமென்றே வைரல் செய்யப்படும் நோக்கில் நடந்ததா அல்லது சாதாரணமாக நடந்தது வைரலானதா என்பது குறித்து போதிய தகவல்கள் இல்லை.

தன் கைகளில் ரோட்டுக்கடை நடத்தும் பெண் மணி முகத்தை யாராவது பச்சைக் குத்தி பார்த்திருக்கிறீர்களா? சுவாரஸ்யமாக ஒருவர் அப்படி செய்திருக்கிறார். டெல்லியின் முக்கியமான தெருவில் வடபாவு கடை நடத்தி வரும் சந்திரிகா ஜெரா தீக்சிட்தான் அந்த வடபாவு பெண்மணி.

பிக்பாஸ் ஓடிடி போட்டியாளராக இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை மிக சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டு தனது தொழிலைப் பெருக்கிக் கொண்டார் தீட்சித். டெல்லி சைனிக் விஹார் பகுதியில் இவரது கடை இருக்கிறது. இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகம். தற்போது இவரது ரசிகர்களில் ஒருவர் இவரது முகத்தை டாட்டூ போட்டுள்ளார்.

பலரும் இவரது வீடியோக்களை எண்டர்டெய்ன்மெண்டாக பார்த்து வரும் நிலையில், ஒருவர் மட்டும் இதனை இன்ஸ்பிரேசனாக எடுத்துக் கொண்டுள்ளார். அவரை தனது குரு என்று கருதி அவரது முகத்தை டாட்டூ போட்டுள்ளார். இதுகுறித்து அவர் நெகிழ்ச்சியாக பேசுகிறார்.

மகேஷ் சாவன் என்பவர், தனது பகுதியிலுள்ள ஒரு டாட்டூ கடைக்குள் நுழைகிறார். அங்கு அவரிடம் என்ன டாட்டூ போட வேண்டும் என்று கேட்கப்படுகிறது. அவர் ஒரு பெயரைச் சொல்லி அந்த டாட்டூ போடவேண்டும் என முகத்தைக் காட்டுகிறார். பின் அவரது புகைப்படம் காட்டப்படுகிறது. டாட்டூவாக அது யார் என்பது நமக்கு சரியாக புரியவில்லை. அதன்பின்னர் அது தனது குரு தீட்சித் என்று அவர் கூறுகிறார்.

அவரின் பாதையைப் பின்பற்றியே தானும் ஒரு வடபாவு கடையை அமைத்திருப்பதாக தெரிவிக்கிறார்.

Tags

Next Story