எருமப்பட்டி அருகே கிராம முனேற்ற பயிற்சி : கலெக்டர் துவக்கம்

எருமப்பட்டி அருகே விவசாயிகளுக்கான கிராம முன்னேற்ற பயிற்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

Update: 2024-07-05 02:30 GMT

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, ரோட்டின் தரத்தை மாவட்ட கலெக்டர் உமா சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.

எருமப்பட்டி அருகே விவசாயிகளுக்கான கிராம முன்னேற்ற பயிற்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சி, கிராம பஞ்சாயத்து சேவை மையத்தில் வேளாண்மை துறையின் சார்பில், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான கிராம முன்னேற்ற பயிற்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சியை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கான தமிழக அரசின் வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் மேலாண்மை பயிற்சி கையேடுகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி பஞ்சாயத்தில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி பஞ்சாயத்தில் புதுக்கோட்டை ரோடு முதல் சுப்ரமணியசாமி கோயில் வரை புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ரோட்டின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.

பின்னர், போடிநாய்க்கன்பட்டி துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்துப்பொருட்களின் இருப்பு, டாக்டர்கள் மற்றும் நோயாளிகளின் வருகை விவரம், சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளுக்கான படுக்கை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், போடிநாய்க்கன்பட்டி ரேஷன் பொது விநியோகப்பொருட்களின் இருப்பு, பொருட்களின் தரம் மற்றும் கடையின் மொத்த ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளிட்ட விபரங்களை பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News