நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ.30.94 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.30.94 லட்சம் கிடைக்கப் பெற்றது.

Update: 2021-10-14 03:15 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயில்களில் 10க்கும் மேற்பட்ட உண்டியல்கள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் கோயில்கள் பூட்டப்பட்டிருந்தாலும், ஆஞ்சநேயர் கோயில் வெளியே இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினார்கள். 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணி கணக்கிடப்படும்.

அதையொட்டி தற்போது பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ.28 லட்சத்து 92 ஆயிரத்து 819 ரொக்கம் கிடைத்தது. நரசிம்மர் கோயிலில் ரூ.2 லட்சத்து ஓராயிரத்து 647 ரொக்கமும், 15 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

Tags:    

Similar News