ஏ.எஸ்.பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக 32ம் ஆண்டு விழா

நாமக்கல் ஏ.எஸ். பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலயத்தில், கும்பாபிஷேக 32ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-02-05 12:45 GMT

கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை ஸ்ரீ சக்தி கணபதிக்கு தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் ஏ.எஸ். பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலயத்தில், கும்பாபிஷேக 32ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் ஏ.எஸ். பேட்டையில் பிரசித்திபெற்ற, ஸ்ரீ சக்தி கணபதி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், கும்பாபிஷேக 32 ம் ஆண்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, விழாவை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, திரளான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, கோயிலில் மகா கணப்தி ஹோமம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் வேள்வி நடைபெற்றது. பிறகு ஸ்ரீ சக்தி கணபதிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள், லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் சுப்பிரமணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Similar News