மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவை அமைச்சர் மற்றும் எம்.பி வழங்கினர்.

Update: 2022-01-14 01:45 GMT

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பணிக்காலத்தின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, பணி நியமன உத்தரவுகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.

மோகனூரில் உள்ள, கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் மற்றும் எம்.பி வழங்கினர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்கரை ஆலையில், பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா தலைமையில் நடைபெற்றது. ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள் 38 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நவலடி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சரஸ்வதி, திமுக பிரமுகர்கள் சரவணன், உடையவர், அர்ஜுனன், செல்லவேல், அருணகிரி, கோபால், ஆலை நிர்வாக குழு துணை தலைவர் ராக்கியண்ணன், இயக்குநர்கள் வரதராஜன், கு ப்புதுரை, ஜெயராஜ், தங்கம்மாள், ராமலிங்கம் மற்றும் பூவராகவன், ராஜாகண்ணன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆலை நிர்வாகக்குழு தலைவர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News