100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

100 வேலை திட்டப்பணி வழங்கக் கோரி நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-16 06:30 GMT

பைல் படம்.

100 வேலை திட்டப்பணி வழங்கக்கோரி நாமக்கல்லில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் நந்தகுமார், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தினசரி சம்பளமாக ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை டவுன் பஞ்சாயத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News