நாமக்கல் அரசு பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு மருத்துவ படிப்பில் அட்மிஷன்

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 16 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்துள்ளது.

Update: 2022-01-30 05:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 16 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும், மாணவ மாகவிகளுக்கு, எம்பிபிஎஸ் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 8 மாணவர்களுக்கும், 7 மாணவிகளுக்கும் எம்பிபிஎஸ் அட்மிஷன் கிடைத்துள்ளது. இவர்களைத் தவிர ஒரு மாணவி பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்பில் சேர்ந்துள்ளார். இவர்கள் 16 பேருக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டு 100 மாணவ மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் முதலாண்டு சேர்க்கை வழங்கிட இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி, 100 இடங்களில் 15 இடங்கள் அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 85 இடங்களில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 6 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் முதல் சேர்க்கையாக சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி, இரண்டாவதாக அதே பள்ளி மாணவி பிரியா ஆகியோர் எம்பிபிஎஸ் அட்மிஷன் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News