100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி நாமக்கல்லில் பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்

100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி நாமக்கல்லில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

Update: 2024-03-27 10:25 GMT

நூறு சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி நாமக்கல்லில் பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்.

நாமக்கல் நகராட்சி அலுவலக மேல் மாடியில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூன் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் ஹர்குன்ஜித்கவுர், அர்ஜூன் பேனர்ஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சதபலூன் பறக்கவிடப்பட்டது.

நாமக்கல் லோக்சபா தொகுதி தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாமக்கல் நகராட்சி அலுவலக மேல் தளத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். மத்திய தேர்தல் கமிஷன் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர், தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்கவிட்டனர்.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் வாக்குப்பதிவை குறிக்கும் ஒற்றை விரல் சின்னத்துடன் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இவ்வாகனங்கள் மூலம் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. வருகின்ற ஏப். 19ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்.

உதவி தேர்தல் அலுவலர் பார்த்தீபன், நாமக்கல் தாசில்தார் சீனிவாசன், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News