நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில அளவில் 5ம் இடம்

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 74.29 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. மாநில அளவில் அதிக ஓட்டுகள் பதிவான பட்டியலில் நாமக்கல் 5ம் இடம் பெற்றுள்ளது.

Update: 2024-04-19 16:00 GMT

பைல் படம்

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 74.29 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. மாநில அளவில் அதிக ஓட்டுகள் பதிவான பட்டியலில் நாமக்கல் 5ம் இடம் பெற்றுள்ளது.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளனர், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,30,584 வாக்காளர்கள், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள், பரமத்திவேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், திருச்செங்கோடு தொகுதியில் 2,30,415 வாக்காளர்கள், சங்ககிரி தொகுதியில் 2,69,270 வாக்காளர்கள் என, 6 சட்டசபை தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுச்சாவடிகளுக்கு வருகை தந்து ஓட்டுப் போட்டனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், ஓட்டுச்சாவடிகளில் இருந்து, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரனங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனித்தனி கட்டிடங்களில் வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் உமா முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் தற்போது வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறையில் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இன்று மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 74.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மாநில அளவில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த 2019ம் ஆண்டு பதிவான மொத்த வாக்கு சதவீதமான மொத்த வாக்குகள் 80.2 சதவீதத்தைவிட, இந்த தேர்தலில் 5,91 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News