ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த 26 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 26 வாகனங்கள், வரும் 27ம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.;

Update: 2025-05-21 09:20 GMT

பைல் படம் 

நாமக்கல், 

நாமக்கல் பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 26 வாகனங்கள், வரும் 27ம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட, 12 டூ வீலர்கள், 14 கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கான அபராதத் தொகையை அதன் உரிமையாளர்கள் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள முன்வராத காரணத்தினால் அவை ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் கீரம்பூரில் உள்ள குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் எஸ்.ஐ. அலுவலகத்தில் 26 வாகனங்களும் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News