நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர் பேரணி

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நாமக்கல்லில் 19 கி.மீ. தூரம் டூ வீலர் பேரணி நடைபெற்றது.

Update: 2024-04-16 02:30 GMT

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நாமக்கல்லில் 19 கி.மீ. தூரம் டூ வீலர் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் நாளான, வரும், 19ம் தேதி, ஓட்டுப்போட தகுதியுடைய அனைவரும் 100 சதவீதம் ஓட்டுப்போடுவதை உறுதி செய்யும் வகையில், சட்டசபை தொகுதி வாரியாக, தொடர்ந்து பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு உறுதி செய்வதை வலியுறுத்தி, டூ வீலர் விழிப்புழர்வு பேரணி நடைபெற்றது. சேலம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி முன்பு துவங்கிய பேரணியை தேர்தல் கமிஷன் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். டூ வீலர் பேரணி சேலம் ரோடு, மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்ட், பார்க் ரோடு, கோட்டை ரோடு, திருச்செங்கோடு ரோடு, நல்லிபாளையம், சேலம் - கரூர் பைபாஸ் ரோடு வழியாகச் சென்று, மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது.

இந்த விழிப்புணர்வு டூ வீலர் பேரணி, 19 கி.மீ., தூரம் கடந்து சென்றது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி தேர்தல் அலுவலர் பார்த்திபன், டி.எஸ்.பி. ஆனந்தராஜ், தாசில்தார் சீனிவாசன், ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News