பணம் பறிமுதல் - அதிகாரிகளுடன் ஓட்டுனர் வாக்குவாதம்

Update: 2021-03-16 09:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஓட்டுனர் ஈடுபட்டார்.

நாமக்கல்லை அடுத்த முதலப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் சுமார் 9 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் பணத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முயற்சித்த போது கோழிகள் வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைக்க ஓட்டுனர் மறுத்ததோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

சுமார் அரைமணி நேரம் இந்த வாக்குவாதம் நடந்தது. இறுதியாக 9 லட்சம் ரொக்கப் பணத்தை கோழிகள் வாங்குவதற்காக தான் எடுத்து வரப்பட்டது என உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஓட்டுனரிடம் பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை தர மறுத்து அதிகாரிகளிடம் ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News