பள்ளிகள் திறப்பு - கிருமிநாசினி அடிப்பு தீவிரம்

நாமக்கல் பள்ளிகளில் கிருமிநாசினி அடிக்கும் பணி தீவிரம்.

Update: 2021-01-18 09:54 GMT

10 மற்றும் 12-ம் வகுப்புகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை முதல் துவங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 346 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது வகுப்பறையை சுத்தம் செய்வது மேலும் வகுப்பறைகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் வகுப்பறையில் அமர செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக்கு வரும் 45 ஆயிரம் மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்குவதற்காக லட்சத்து 52 ஆயிரம் சத்து மற்றும் ஜிங்க் மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாகவும், இவைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கடைபிடிக்க அறிவுறுத்தி நடத்தியுள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News