நாமக்கல் : திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் மதுரை நோக்கி செல்ல முயன்ற நிலையில், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.;

Update: 2025-02-05 05:30 GMT

நாமக்கல் : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலர் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, திருப்பரங்குன்றத்துக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

144 தடை உத்தரவு

இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டத்தில் இரு நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் கைது

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் மதுரை நோக்கி செல்ல முயன்ற நிலையில், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் தங்க வைப்பு

நாமக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகில் கைது செய்யப்பட்டவர்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.மேலும், மதுரையை நோக்கி செல்லும் மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News